நேஷனல் ஹெரால்டு விவகாரம் இன்று நாடு முழுவதும் செய்தியாளர் சந்திப்பு: காங்கிரஸ் தலைமை உத்தரவு

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி நாளை டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக உள்ளார். அப்போது நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு முன்பு சத்தியாக் கிரக போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மேலும், இளைஞர் காங்கிரஸ் தரப்பில் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு முன்பு போராட்டங்களை நடத்தவும், டெல்லியில் ராகுல் காந்தி ஆஜராக உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தை நோக்கி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணி செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்தும், இந்த விவகாரத்தில் ஒன்றிய புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடும், இவ்வழக்கில் பின்புலத்திலிருந்து செயல்படுபவர்கள் குறித்தும் மக்களிடம் எடுத்து சொல்வதற்காக நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட உள்ளது. இதற்கான உத்தரவை மாநில தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைமை பிறப்பித்துள்ளது.

Related Stories: