×

அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உறுதியேற்க வேண்டும்

சென்னை: குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு விளங்க  அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள 18 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு சென்று கல்வி, கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டுகளில் கவனம் செலுத்தி தம் அறிவை பெருக்கி புதிய வரலாறு படைக்கும் சிற்பிகளாக திகழவேண்டும் என்பது முதல்வரின் கனவு. இதற்கு செயல்வடிவம் வழங்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு சிறப்பான செயல் திட்டங்களை வகுத்து திறம்பட செயல்படுத்தி வருகிறது.

 குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலும் அகற்றிட நமது சிறந்த கல்வி முறையினை பயன்படுத்தி ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிட குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு வாருங்கள் என அன்புடன் இருகரம் நீட்டி அழைக்கின்றேன். ஆசிரியர்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணி செய்து தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்குங்கள்.

குழந்தை தொழிலாளர் முறை அற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்க ‘இடைநில்லாக் கல்வி, தடையில்லா வளர்ச்சி’ என்ற இலக்கினை நோக்கி பயணிப்போம் என்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமான இன்று அனைவரும் உறுதியேற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Minister ,Maze , Minister Anbil Mages, Child Labor,
× RELATED பிரதமர் மோடியிடம் அணுசக்தி, விண்வெளி...