×

தமிழக வாலிபருக்கும், லண்டன் பெண்ணிற்கும் இந்து முறைப்படி திருமணம்: கடலூரில் நடந்தது

கடலூர்: கடலூர் அருகே உண்ணாமலை செட்டிச்சாவடி பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி மகன் ரஞ்சித். இன்ஜினியரான இவர், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் இங்கிலாந்தை சேர்ந்த சேர்ந்த அன்னாலூய்சா என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் அன்னாலூய்சா இங்கிலாந்தில் லண்டனில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்து அங்கு சென்று பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதற்கு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று காலை கடலூர் அருகே திருவந்திபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மணமகள் அன்னாலூய்சா தமிழ் முறைப்படி பட்டுப் புடவை அணிந்திருந்தார். மணமகன் ரஞ்சித் பட்டு வேட்டி, சட்டையுடன் அமர்ந்து வேத மந்திரங்கள் முழங்க அன்னாலூய்சாவுக்கு தாலி கட்டினார்.

அப்போது அங்கு கூடியிருந்த உறவினர்கள் மற்றும் மணமக்களின் பெற்றோர் அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தனர். இதுகுறித்து மணப்பெண் அன்னாலூய்சா கூறுகையில், நானும், ரஞ்சித்தும் ஒருவரை ஒருவர் மனதார விரும்பி காதலித்தோம். இருப்பினும் எங்கள் பெற்றோர் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக, இரண்டு ஆண்டுகள் காத்திருந்தோம். இரு வீட்டாரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததால், திருமணம் செய்து கொண்டோம் என்றார்.

Tags : Tamil Nadu ,London ,Cuddalore , Hindu marriage to a Tamil boy and a London girl: took place in Cuddalore
× RELATED ஜெய்பீம் பட உண்மை சம்பவத்தில்...