×

போலீஸ் ஸ்டேஷனில் சில்மிஷம்: மதுரையில் பரபரப்பு

மதுரை: மதுரை நகரில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில் மாடியில் பெண் எழுத்தர் மற்றும் போலீஸ் ஒருவர் ‘தனிமையில்’ இருந்துள்ளனர். இது சக போலீசாருக்கு தெரியவரவே இருவரும் மருத்துவ விடுப்பில் சென்று விட்டனர். மதுரையில் அழகர்கோயில் சாலையில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில் 2 தினங்களுக்கு முன்னர் போலீசார் அனைவரும் பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டனர்.

இதனால் எழுத்தர் பணியில் இருந்த பெண் போலீஸ் மற்றும் முதுநிலை போலீஸ் மட்டுமே பணியில் இருந்தனர். அப்போது, இருவரும் ஸ்டேஷனுக்கு வந்த தனிநபர் ஒருவரை கீழே காவலுக்கு அமர வைத்து விட்டு, மாடிக்கு சென்று, அறையை பூட்டிக் கொண்டு தனிமையில் இருந்துள்ளனர். அப்போது திடீரென வெளி வேலைக்கு சென்று இருந்த போலீஸ் ஒருவர் ஸ்டேஷனுக்கு வந்துள்ளார்.

மாடியில் உள்ள அறையில் சீருடையை மாற்ற சென்றுள்ளார். அறை கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால், கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாக தட்டியும் கதவை திறக்கவில்லை. இதனால் ஜன்னல் வழியாக பார்த்து உள்ளார். அப்போது இருவரும் தனிமையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இருவரையும் அவர் கண்டித்துள்ளார். இது சக போலீசாருக்கும் தெரியவரவே இருவரும் தற்போது மருத்துவ விடுப்பில் சென்று விட்டனர். இது தொடர்பாக புகார் சென்றுள்ளதால்,  விசாரணைக்காக அவர்களை உயரதிகாரிகள் அழைத்துள்ளனர்.

Tags : Sillmisham ,Maduram , Police Station, Madurai,
× RELATED ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம்...