×

புதுகும்மிடிப்பூண்டி அருகே கும்பாபிஷேக விழா

கும்மிடிப்பூண்டி: புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சமேத ஜடராய ஆலயத்தில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, இந்த ஆலயத்தில் கடந்த 1ம் தேதி பந்தக்கால் நடப்பட்டது. இதைத் தொடர்ந்து அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, பிரார்த்தனை, புண்யாஹவாசனம், மஹாசங்கல்பம், க்ரஹபிரீதி, மஹாகணபதி ஹோமம், நவக்கிரஹ சாந்தி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை உள்பட பல்வேறு யாகபூஜைகளும் அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றன.

இந்நிலையில், நேற்று காலை நான்காம் கால யாக பூஜை, வேதிகார்ச்சனை,  ஹோமம், மஹாபூர்ணாஹுதி,வேவேத உபசாரம், தீபாராதனையுடன் கலசங்கள் மூலம் சிவாச்சாரியார்கள் கோபுரத்தின்மீது புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அங்கு கும்மிடிப்பூண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள்மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு அலங்காரம், மாங்கல்ய தாரணம், அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பெரியவர்கள், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags : Pudukummidipoondi , Pudukummidipoondi, Kumbabhishek Festival,
× RELATED தனியார் தொழிற்சாலையில் இருந்து...