×

பாலிவுட் நடிகை மகிமாவுக்கு புற்றுநோய்

பாலிவுட் நடிகை மகிமா சவுத்ரிக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஷாருக்கான் ஜோடியாக பர்தேஸ் இந்திப் படத்தில் நடித்தவர், மகிமா சவுத்ரி. பல இந்திப் படங்களில் நடித்த இவர், திருமணத்துக்குப் பிறகு அமெரிக்காவில் செட்டிலானார். இந்நிலையில், நடிகர் அனுபம் கேர் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:‘சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்த மகிமாவை தொடர்புகொண்டு, எனது படத்தில் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அப்போது தனது உடல்நிலை குறித்து அவர் தெரிவித்தார். அது எனக்கு அதிர்ச்சியை தந்தது. மகிமாவுக்கு வந்திருப்பது கொடிய நோய் கிடையாது. அதே நேரம், அவரது மனதிடத்தை நான் பாராட்டுகிறேன். அவர் சோர்ந்துபோய் விடவில்லை. எனது படத்திலும் அவர் நடிக்க உள்ளார்’ என்றார்.இதுகுறித்து மகிமா சவுத்ரி கூறும்போது, ‘எனக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக நான் உடைந்து போகவில்லை. அதற்கு முக்கிய காரணம் எனது கணவரும். குடும்பமும்தான். அவர்கள் எனக்கு துணையாக இருக்கிறார்கள். இந்த நோயுடன் நான் கடுமையாகப் போராடி வருகிறேன். பெண்கள் அனைவருமே அவ்வப்போது தங்களது உடலைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்நிலையிலும் என்மீது அன்பு காட்டும் இந்திய ரசிகர்களை நான் எப்போதும் மறக்க மாட்டேன். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தவே மீண்டும் நான் சினிமாவில் நடிக்க வருகிறேன்’ என்றார்.

Tags : Bollywood ,Makima , Bollywood actress Magima Chaudhary has been diagnosed with breast cancer.
× RELATED ஹிமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் கங்கனா ரானாவத் வேட்பு மனு தாக்கல்