சொத்துக்களைக் கைப்பற்றும் முயற்சிக்கு எதிராக நீதிகேட்டு வலுவான மக்கள் போராட்டம்: எஸ்.டி.பி.ஐ. அறிவிப்பு

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய துணைத் தலைவர் ஷர்புதீன் வெளியிட்ட அறிக்கை:இறைத்தூதர் அவமதிப்பு தொடர்பான பாஜ நிர்வாகிகளின் பேச்சுக்கு எதிர்ப்பு  தெரிவித்து, கான்பூரில் நடந்த போராட்டத்தின்போது நடந்த  வன்முறை தொடர்பாக,   ஒருதலைப்பட்சமாக குற்றம் சாட்டப்பட்ட முஸ்லீம்களின் சொத்துக்களைக்  கைப்பற்றி, அவர்களின் வீடுகளையும், கட்டிடங்களையும் புல்டோசர் கொண்டு  இடித்துத் தள்ளும் உ.பி. பாஜ அரசாங்கத்தின் திட்டத்தை கடுமையாக கண்டிக்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்க அரசாங்கத்திற்கோ அல்லது எந்த அதிகாரத்திற்கோ உரிமை இல்லாதபோதும், மக்களின் சொத்துக்களை கைப்பற்றுவதில், புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளுவதில் உ.பி. அரசு தொடர்ந்து புகார்தாரர், வழக்குரைஞர் மற்றும் நீதிபதியாக செயல்பட்டு வருகிறது. ஆதித்யநாத் அரசின் சட்டவிரோதச் செயல்கள் சட்டத்தின் ஆட்சிக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். புல்டோசர் போக்கிரித்தனத்தில் இருந்து அரசு பின்வாங்கவில்லை என்றால், சொத்துக்களைக் கைப்பற்றும் முயற்சிக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ.கட்சி நீதிகேட்டு வலுவான மக்கள் போராட்டங்களை நடத்தும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: