×

சித்தராமையாவுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். அந்தவரிசையில் 2022ம் ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம். இந்த ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதினை கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு வழங்கப்படுகிறது. பெரியார் ஒளி விருது எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரைக்கும், காமராசர் கதிர் விருது விஜிபி உலக தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம், அயோத்திதாசர் ஆதவன் விருது முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி செல்லப்பனுக்கும், காயிதேமில்லத் பிறை விருது எஸ்.டி.பி.ஐ தலைவர் தெகலான் பாகவிக்கும், செம்மொழி ஞாயிறு தொல்லியல் அறிஞர் பேரா.கா.ராசன், மார்க்ஸ் மாமணி விருது மறைந்த எழுத்தாளர் ஜவஹர்க்கும் வழங்கப்பட உள்ளது.

Tags : Ambedkar Flame Award for Chidramaiah: Thirumavalavan Announcement
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...