×

ஸ்ரீபெரும்புதூரில் இளைஞர் மேம்பாட்டு மையத்தில் 22 மாணவிகள் உட்பட 29 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் 22 மாணவிகள் உள்பட 29 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, சிக்கிம், மணிப்பூர் உள்பட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த 235 மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். இந்த, மாணவர்களுக்கு காய்ச்சல், சளி இருமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், கொரோனா மற்றும் ஓமிக்கிரான் இருப்பது தெரிய வந்தது. அதில் ஒருவர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும், மற்றொருவர் தண்டலம் தனியார் மருத்துவமனையிலும் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தனர். இதையறிந்ததும், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், பெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தை நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். சுகாராத்துறை சார்பில் அனைத்து மாணவ, மாணவியர் மற்றும் பேராசியருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கான மருத்துவ முடிவுகள் நேற்று வெளி வந்தது. இதில், 22 மாணவிகள் உட்பட 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, அவர்கள் அனைவரும் ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

Tags : Corona ,Health Secretary ,Youth Development Centre ,Sriperumudur , Corona for 29 people, including 22 students, at the Youth Development Center in Sriperumbudur: Health Secretary study
× RELATED தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக்...