நோய் பரப்பும் பன்றிகளை ஒழிக்க வேண்டும்: ஆலந்தூர் மண்டல கூட்டத்தில் திமுக கவுன்சிலர் கோரிக்கை

ஆலந்தூர்: நந்தம்பாக்கத்தில் நோய் பரப்பும் பன்றிகளை ஒழிக்க வேண்டும் என ஆலந்தூர் மண்டல கூட்டத்தில் திமுக கவுன்சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். ஆலந்தூர் 12வது மண்டல குழு கூட்டம் மன்ற கூடத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன் தலைமை வகித்தார். உதவி கமிஷனர் பாஸ்கரன் செயற்பொறியாளர்கள் குடிநீர்வாரிய அதிகாரி கல்யாணி சுகாதார நல அலுவலர் டாக்டர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் 53 தீர்மானங்கள் வைக்கப்பட்டு நிறைவேறிய விவாதம் வருமாறு: நாஞ்சில் பிரசாத் (காங்): எனது வார்டில் புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் சரிவர வேலை நடப்பதில்லை. அதிகாரிகளும் எட்டிப் பார்ப்பதில்லை. செல்வேந்திரன் (திமுக) பேசும்போது, ஓ.எஸ்.ஆர்.நிலங்களை மெட்ரோ குடிநீர் வாரியம் கையகப்படுத்தி வட மாநில தொழிலாளர்களை தங்க வைத்துள்ளனர். இதனால், ஊருக்குள் பிரச்னை அவர்களை அகற்ற வேண்டும், என்றார்.

அமுதபிரியா செல்வம் (திமுக) பேசுகையில்: மக்களை தேடி மருத்துவ திட்டத்தினை எனது வார்டில் செயல்படுத்த வேண்டும், அதேபோல் பூங்கொடி ஜெகதீஸ்வரன் (திமுக): ஆதம்பாக்கம் பழண்டியம்மன் கோயில் தெரு நடைபாதை கடைகளை அகற்றி பேருந்து நிறுத்தம் கொண்டு வர வேண்டும், என்றார். உஷாராணி பாண்டியன் (அதிமுக) பேசும்போது:  மயான பணியாளர்களுக்கு சம்பளம் நிர்ணயிக்க வேண்டும், என்றார்.  

பாரதிவெங்கடேஷ் (திமுக): நந்தம்பாக்கம் பர்மா காலனி பகுதியில் மூளைகாய்ச்சல்நோய் பரப்பும் பன்றிகளை ஒழிக்க வேண்டும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும், என்றார். சாலமோன் (திமுக): ஆலந்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழ் பெயர் பலகை இல்லை, என்றார். பிருந்தாஸ்ரீ முரளி கிருஷ்ணன் (திமுக): ஆலந்தூர் ஜால்தெருவில் உள்ள அரசு பள்ளியில் அடிப்படை வசதி கேட்டு பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை, என்றார். கேள்விகளுக்கு பதில் அளித்து மண்டல தலைவர் என் சந்திரன் பேசும்போது: சர்வின் சிறிய கோரிக்கைகளை உடனே செய்து தர வேண்டும். குப்பை அகற்றுவது பள்ளிகளில் அடிப்படை தேவைபோன்ற சிறுசிறு வேலைகளை உடனே செய்து தரலாம். கவுன்சிலர் கூட்டத்தில் பேசி தான் நிறைவேற்ற வேண்டுமா குப்பை தேங்கும் பிரச்னை எல்லா வார்டுகளிலும் உள்ளது. தனியார் நிறுவனத்தின் அதிக ஆட்களை வேலைக்கு அமர்த்தி குப்பைகளை அகற்ற வேண்டும், என்றார்.

Related Stories: