×

சேலம் அருகே ஒருதலை காதலால் விபரீதம்: காதலிக்க மறுத்ததால் மாணவியின் தலையில் கல்லை போட்டு கொலை: இளைஞருக்கு போலீசார் வலைவீச்சு

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, காதலிக்க வற்புறுத்தி  கல்லூரி மாணவியின் தலையில் கல்லை போட்டு இளைஞர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி முருகேசன் என்பவரின் இளைய மகளும், கல்லூரி மாணவியுமான ரோஜாவை, சாமிதுரை என்ற இளைஞர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். தன்னை காதலிக்க வற்புறுத்தி மாணவியிடம் தொடர்ந்து சாமிதுரை கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாணவி ரோஜாவின் மூத்த சகோதரிக்கு திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அழைப்பிதழை கொடுக்க, பெற்றோர் வெளியே சென்றுள்ளனர். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை  அறிந்த சாமிதுரை, ரோஜாவிடம் காதலிக்கக் கூறியும், இல்லையென்றால் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். அப்போது மறுப்பு தெரிவித்து கூச்சலிட்டதால், ஆத்திரமடைந்த சாமிதுரை, மாணவியின் தலையில் கல்லை போட்டு கொடூராமாக தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Salem ,Salem Perry , Salem, love, student, murder, youth, police
× RELATED சேலம் ஏரியில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் சிக்கின