×

முகமது நபிகள் குறித்து பாஜக சர்ச்சைக்குரிய கருத்து... கத்தாரில் உள்ள இந்திய துணை ஜனாதிபதி விருந்து நிகழ்ச்சி ரத்து!

டெல்லி: முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்த தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் விவகாரத்தால் கத்தாரில் உள்ள இந்திய துணை ஜனாதிபதி விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில், பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நவீன் குமார் ஜிந்தால் மற்றும் நுபுர் சர்மா ஆகியோர் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தனர். இதானால் பெரும் எதிர்ப்பு எழுந்தது. இந்திய அளவில் மட்டும் இல்லாமல், அரபு நாடுகளான சவுதி அரேபியா, குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் அதிகாரப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன.

இதனால் இந்த விவகாரம் உலக முழுவதும் பெரும் பரவி பிரதமர் மோடிக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கியது என்று கூறலாம். பாஜக செய்தித் தொடர்பாளர்களாக இருந்த இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் அந்த தாக்கம் குறையவில்லை.

இதனால் தற்போது கத்தார் சுற்றுப்பயணத்தில் உள்ள துணை ஜனாதிபதிக்கு நெருக்கடி எழுந்துள்ளது. அதாவது, நேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கத்தார் அதிபரின் தந்தை ஷேக் ஹமாத் பின் கலீபா அல் தானியுடன் சந்தித்தார். அதனையடுத்து பிரதமர் ஷேக் காலித் அப்துல்லாஸ் அல் தானியுடன் சந்திப்பு நடைபெற்றது.   

அந்த நேரத்தில் தான் இந்தியாவில் இந்த சம்பவம் பெரிதாக உருவானது. இதனால் கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மீட்டலிடம் கத்தார் சார்பாக விளக்கம் கேட்கப்பட்டது. கத்தார் இந்தியாவிற்கு சாமானையும் அனுப்பியது.

அதனையடுத்து, வெங்கையா நாயுடு மேற்கொள்ள இருந்த செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. அந்நாட்டு துணை அதிபர் ஷேக் அப்துல்லா பின் அகமதுடன் நடக்க இருந்த மதிய உணவு விருந்தும் கடைசி நேரத்தில் ரத்தானதாக கூறப்படுகிறது.

Tags : BJP ,Mohammad Nabi ,Indian ,Vice President ,Qatar , BJP's controversial comment on Prophet Mohammad ... Indian Vice President's banquet in Qatar canceled!
× RELATED ஈரான் முதல் முறையாக ஸ்டார்லிங்க் இணையதளத்தை முடக்கியுள்ளது