×

ஆரணி அருகே வாலிபர் பலியான சம்பவம் விபத்துக்கு காரணமானவரை கைது செய்யக்கோரி சாலை மறியல்-டிஎஸ்பி பேச்சுவார்த்தை

ஆரணி : ஆரணி அருகே தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் பலியாவதற்கு காரணமான நபரை கைது செய்யக்கோரி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த வெள்ளேரி கிராமத்தை சேர்ந்தவர் தரணிகுமார்(31). இவர், சென்னை அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுகன்யா(27). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 3ம் தேதி வழக்கம்போல் வேலை முடிந்ததும், தினேஷ்குமார் வெள்ளேரி அருகே உள்ள பக்கிதக்க கூட்ரோட்டில் பஸ்சில் இருந்து இறங்கி அதிகாலையில் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, எதிரே வந்த பைக் திடீரென நிலை தடுமாறி தரணிகுமார் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த தரணிகுமார் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தரணிகுமார் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், விபத்து நடந்தது குறித்து தரணிகுமாரின் குடும்பத்தாருக்கு போலீசார் எந்த தகவலும் தெரிவிக்காமல் அவர் இறந்த பிறகே தெரியப்படுத்தியதாக கூறியும், விபத்து ஏற்படுத்திய நபருக்கு போலீசார் ஆதரவாக செயல்படுவதாகவும் கூறியும், விபத்துக்கு காரணமானவரை கைது செய்யக்கோரியும், ஆரணி- ஆற்காடு சாலை பக்கிதக்க கூட்ரோடு அருகே நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், டவுன் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Valiper ,Arani , Arani: A private company employee near Arani was involved in a road blockade by his relatives demanding the arrest of the person responsible for the accident.
× RELATED ஆரணி அருகே அழிந்த கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு