ஜோலார்பேட்டை நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா-வருவாய்க் கோட்ட அலுவலர் பங்கேற்பு

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை நகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நேற்று மரம் நடும் விழா நடைபெற்றது.ஜோலார்பேட்டை நகராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நேற்று வனப்பகுதியில் மரம் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் மா.காவியா விக்டர் தலைமை தாங்கினார். நகர மன்ற  துணை தலைவர் பொ. இந்திரா பெரியார்தாசன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் கோ.பழனி வரவேற்றார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர்  வருவாய் கோட்ட அலுவலர் லட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஜோலார்பேட்டை அடுத்த மேட்டுச்சக்கரகுப்பம் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். இதனையடுத்து நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை நகர கழக செயலாளர் ம.அன்பழகன், நகராட்சி பொறியாளர் கோபு, முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சி.எஸ். பெரியார் தாசன் உள்ளிட்ட நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், நகராட்சி தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: