வேப்பனஹள்ளி அருகே தாசிரிப்பள்ளி ஏரியை தூர்வார கோரிக்கை

வேப்பனஹள்ளி : வேப்பனஹள்ளி அருகே உள்ள நாடுவனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட என்.தாசிரிப்பள்ளி மேலூர் கிராமங்களுக்கிடையில், சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலமாக தாசிரிப்பள்ளி மற்றும் மேலூர், நடுசாலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 300 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்த ஏரி தூர்வாரப்படாததால் புதர்கள் மண்டியும், மதகுகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால், நீர் ஏரியில் தங்காமல் வீணாக வெளியேறி வருகிறது.

இதனால், விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்காததால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பலர், தென்னை வளர்ப்பிற்கு மாறிவிட்டனர்.தண்ணீர் பற்றாக்குறையால் இப்பகுதியில் நெல், ராகி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.எனவே, அதிகாரிகள் உடனடியாக ஏரியை தூர்வாரி, மதகுகளை சரிசெய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: