×

மறைமலைநகரில் அடுத்தடுத்த வீடுகளில் நகை, பணம் கொள்ளை

செங்கல்பட்டு: மறைமலைநகர் அடுத்த சட்டமங்கலம் கணபதி சிண்டிகேட் நகரை சேர்ந்தவர் திவாகர். தனியார் நிறுவன ஊழியர். இவர், உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 15 சவரன் நகை, ₹50 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது‌.  இதுபோல், இவரது வீட்டின் அருகேயுள்ள ராஜ்குமாரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 3 சவரன், ₹10 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து  மறைமலைநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.




Tags : Maraimalai Nagar , Robbery of jewelery and money in adjoining houses in Maraimalai Nagar
× RELATED மறைமலைநகர் மாருதி சபா ஆலயத்தில் கொடிமரம் அமைத்து கும்பாபிஷேகம்