காங். வேட்பாளர் உமா தாமஸ் வெற்றி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், எர்ணாகுளம்  மாவட்டத்தில் உள்ள திருக்காக்கரை தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த  பி.டி. தாமஸ். சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால்  இறந்தார். இதையடுத்து, கடந்த மாதம் 31ம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல்  நடந்தது. இதில் காங்கிரஸ் வேட்பாளராக பி.டி. தாமசின் மனைவி உமா தாமசும்,  இடதுசாரி கூட்டணி வேட்பாளராக கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை  டாக்டர் ஜோ ஜோசப்பும், பாஜ வேட்பாளராக ராதாகிருஷ்ணனும் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில்், உமா தாமஸ் 25,016 வாக்கு  வித்தியாசத்தில் ஜோசப்பை தோற்கடித்தார்.

Related Stories: