×

பல்கலையின் எல்லைக்குள் அரசியல் பேச தடை விதிப்பதா?...உத்தரவை திரும்ப பெற மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் அரசியல் சார்ந்த பரப்புரைகள், உரையாடல்கள் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் பலப்படுத்துவது குறித்தும், அரசியல் அமைப்பு சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் சார்ந்த விழுமியங்களை மாணவர்கள் பெறுவதற்கும் அரசியல் சார்ந்த உரையாடல்கள் மிகுந்த முக்கியத்துவம் உடையது.

இத்தகு சூழலில் பெரியார் பல்கலைக்கழகம் அரசியல் சார்ந்த உரையாடல்களில் மாணவர்கள் ஈடுபடுவதற்கு தடை விதித்து சுற்றறிக்கை வெளியிட்டிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இதனை தொடர்ந்து இதுபோன்ற உத்தரவினை இதர பல்கலைக்கழகங்களும் பிறப்பிக்க வாய்ப்புள்ளது. எனவே, பெரியார் பல்கலைக்கழகத்தின் இந்த உத்தரவை திரும்ப பெறுவதற்கு தமிழக அரசும், உயர்கல்வித்துறை அமைச்சரும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட்மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Tags : Marxist , University Boundary, Prohibition of Political Speech, Marxist,
× RELATED மின் உதவி பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு