×

குன்னூரில் தொடர் மழை எதிரொலி அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது

குன்னூர் :  குன்னூரில் தொடர் மழை காரணமாக சாலையோரங்களில் உள்ள அருவிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் தண்ணீர் கொட்டுகிறது.நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழை இல்லாததால் நீர்வீழ்ச்சி, அருவி, நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக  குன்னூர் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது.

மழையால அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிறைந்து காணப்படுகிறது. அணைகள் நிரம்பி தண்ணீர் அதிகளவில் மலைப்பாதையில் வழியாக நீர்வீழ்ச்சியாக பயணித்து மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பவானி அணையை அடைகிறது‌. குன்னூர் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் லாஸ் பால்ஸ் பகுதியில்  தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடி வருகிறது. அதே போன்று காட்டேரி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் அதிகமாக கொட்டுவதால் வன விலங்குகளுக்கு தண்ணீர் தேவை பூர்த்தி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊட்டி வரக்கூடிய சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியை ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.

Tags : Coonoor , Coonoor: Due to continuous rains in Coonoor, roadside waterfalls and waterfalls overflow. Nilgiris District
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...