×

திருத்தளிநாதர் கோயிலில் தெப்ப வெள்ளோட்டம்

திருப்புத்தூர் : திருப்புத்தூர் சிவகாமி அம்மன் சமேத திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு நேற்று தெப்பம் வெள்ளோட்டம் நடைபெற்றது.
திருப்புத்தூர் சிவகாமி அம்மன் சமேத திருத்தளிநாதர் திருக்கோயில் வைகாசி விசாகப் பெருவிழா இன்று ஜூன் கொயேற்றத்துடன் துவங்கிறது. வரும் 11ம் தேதி தேரோட்டமும், 12ம் தேதி தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது. இந்நிலையில், மண்டக படிதாரர்கள் கார்காத்த வெள்ளாளர்கள் சமூகத்தினர் ரூ.25 லட்சம் மதிப்பிலான மரத்திலான புதிய தெப்பத்தை வடிவமைத்திருந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக தெப்ப குளத்தில் நீர் பெருகாததாலும், கொரோனா ஊரடங்காலும் தெப்பம் நடக்கவில்லை. தற்போது குளம் பெருகியுள்ளது.

இந்நிலையில், நேற்று ஆதீன கர்த்தா குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலையில் பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை நடந்தது. கோயிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தெப்பக்குளத்திற்கு வந்தார். தொடர்ந்து தெப்பத்திற்குள் நவகலச பூஜைகள், சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் பொன்னம்பல அடிகள் தெப்ப வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து தெப்பம் சீதளக்குளத்தை ஒரு முறை வலம் வந்தது.

Tags : Thiruthalinathar Temple , Tiruputhur: Tiruputhur Sivagami Amman Sametha Thiruthalinathar Temple Vaikasi Visakha festival
× RELATED திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷ விழா