×

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்திற்கு மின் கம்பம் சேத படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு

சென்னை: மின் நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்திற்கு மின் கம்பம், தெருவிளக்கு சேதங்களை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், தனிநபர் மின் தடை, பொதுவான மின் தடைகள் குறித்து நுகர்வோர்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள “மின்னகத்தை” 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்.

அதேபோல், மின்சாரம் தொடர்புடைய பிற புகார்களை மின்னகம் அழைப்பு மையத்தின் 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யாலாம். மேலும், புகார்களை www.tangedco.oov.in என்ற இணையதள பக்கத்தில் பதிவு செய்யலாம். புகார்கள் தீர்க்கப்படவில்லையெனில் அடுத்த கட்டமாக உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர் ஆகியோரை அணுகலாம். அனைத்து நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றங்களின் முகவரிகள் ஆணையத்தின் www.tnerc.eov.in என்ற இணையதளத்திலும், www.tangedco.gov.in என்ற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக இணையதளத்திலும் உள்ளது.

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி என்கிற 4 கோட்டத்தின்  கட்டுப்பாட்டில்  உள்ள 23 குழுக்களும் அமலாக்க பிரிவின் மேற்பார்வை பொறியாளரால் கண்காணிக்கப்படுகிறது. ஆகவே, நுகர்வோர்கள் மின் திருட்டு, தவறான மின் உபயோகம் சம்பந்தமான புகார்களை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக அமலாக்கப்பிரிவிற்கு தெரிவிக்கலாம் அல்லது o@tnebnet.org மற்றும் ceapts@tnebnet.org புகார் அளிக்கலாம். சேதமடைந்த மின்கம்பம், தொங்கலான மின் கம்பிகள், திறந்த நிலையிலுள்ள, சேதமடைந்துள்ள தெருவிளக்குப் பெட்டி, மின் விநியோகப் பெட்டி, அபாயகரமாக வெளியில் தெரியும் மின்வயர்கள் மின் அமைப்பிலுள்ள பழுதுகள் ஆகியவற்றை  நுகர்வோர்கள் தங்கள் கைபேசியில் நிழல்படம் எடுத்து “வாட்ஸ் அப்” எண்ணிற்கு அனுப்பலாம்.

மாவட்டங்கள்    வாட்ஸ் அப் எண்
சென்னை    9445850829    
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்    9444371912    
கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி    9442111912    
சேலம், ஈரோடு, நாமக்கல்    9445851912    
மதுரை, திண்டுக்கல், தேனி,
ராமநாதபுரம், சிவகங்கை    9443111912    
திருநெல்வேலி, தூத்துக்குடி,
கன்னியாகுமாரி, விருதுநகர்    8903331912    
திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர்,
அரியலூர் புதுக்கோட்டை,
திருவாரூர், நாகப்பட்டினம், கரூர்    9486111912    
வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி    6380281341    
விழுப்புரம், திருவண்ணாமலை,
கடலூர்    9445855768

Tags : WhatsApp ,Electricity Regulatory Commission , Electricity pole damage image can be sent to WhatsApp to power consumer grievance forum: Electricity Regulatory Commission announcement
× RELATED நெட் இல்லாமல் வாட்ஸ்அப்பில் தகவல்...