×

புளியந்தோப்பு கே.பி. பார்க்கில் ரூ.1.31 கோடியில் விளையாட்டு திடல்

பெரம்பூர்: சென்னை எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட 77 வது வார்டு புளியந்தோப்பு கே.பி.பூங்கா பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், கட்டப்பட்டுள்ள குடியிருப்பு பகுதியில் 1 கோடியே 31 ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு திடல் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது. ’இந்தப் பகுதி இளைஞர்கள் தவறான பாதையில் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவும் அவர்கள் ஆரோக்கியத்துடன் வாழ்க்கையில் நல்லமுறையில் இருக்கவேண்டி இந்த பகுதியில் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும்’ என்று சென்னை மாநகராட்சிக்கு எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை வைத்திருந்தார்.

இதன் அடிப்படையில், மேற்கண்ட பகுதியில் 1 கோடியே 31 லட்சம் செலவில் விளையாட்டு திடல் அமைப்பதற்காக இன்று காலை அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பரந்தாமன் எம்எல்ஏ கலந்துகொண்டு பூமிபூஜையை போட்டு பணிகளை துவக்கிவைத்தார். இதில் திருவிக. நகர் மண்டல அதிகாரிகள், அரசுத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். ’இந்த பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 50 லட்சத்தில் உடற்பயிற்சி கூடம் அமைப்பதற்கான திட்டப் பணிகளும் விரைவில் தொடங்கும்’ பரந்தாமன் எம்எல்ஏ தெரிவித்தார்.

Tags : Puliyanthoppu , Puliyanthoppu K.P. Park, playground,
× RELATED போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை...