×

போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி: புளியந்தோப்பு, கொடுங்கையூரில் நடந்தது

பெரம்பூர், ஜூன் 27: சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த வகையில் புளியந்தோப்பு காவல் மாவட்டம் சார்பில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் செம்பியம் சரகம் சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான சைக்கிள் பேரணி நடைபெற்றது. செம்பியம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். பேரணியை, திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி, புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் செம்பியம் சரக உதவி கமிஷனர் செம்பேடு பாபு, இன்ஸ்பெக்டர் ஐயப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ மாணவிகளுடன் போலீசாரும் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர். போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் சைக்கிளில் கட்டப்பட்டு, அது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. மேலும் வழி நெடுகிலும் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதே போன்று நேற்று கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட முத்துக்குமாரசாமி கல்லூரி மாணவ, மாணவியர் சுமார் 200 பேர் கொடுங்கையூர் சிட்கோ மெயின் ரோடு, மீனாம்பாள் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 3 கிலோமீட்டர் நடை பயணமாக சென்று போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்தப் பேரணியை புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் தமிழ்வாணன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இதில் இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

* புளியந்தோப்பு காவல் சரகம் சார்பில் நேற்று பெரம்பூர் ஜமாலயா பகுதியில் இருந்து காவலர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் ஓட்டேரி, புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட காவல் நிலையங்களைச் சேர்ந்த காவலர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பேரணியாகச் சென்றனர். இதை புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசன், இன்ஸ்பெக்டர்கள் ஜானி செல்லப்பா, புவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி: புளியந்தோப்பு, கொடுங்கையூரில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Awareness Rally on Anti-Drug Day ,Pulianthoppu ,Kodunkaiyur ,Perambur ,Tamil Nadu Police ,International Anti-Drug Day ,Drug Abolition Day ,Puliyanthoppu ,
× RELATED வேறொரு பெண்ணுடன் தொடர்பால் தூங்கிய கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி