×

அதிமுக ஆட்சியில் கழிப்பறை திட்டத்தில் முறைகேடு: 8 பிடிஓக்கள் உட்பட 9 பேர் மீது வழக்கு- ஒருவர் சஸ்பெண்ட்

சிவகங்கை: காளையார்கோவில் ஒன்றியத்தில் பாரத பிரதமரின் இலவச கழிப்பறை கட்டும் திட்டத்தில்  நடந்த முறைகேடு தொடர்பாக 8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட்ட 9 பேர் மீது லஞ்சம் ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் 1 வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்தை சேர்ந்த  மறவமங்கலம் ஊராட்சிக்கு உட்பட கிராமங்களில் பாரத பிரதமரின் இலவச கழிப்பறை கட்டும் திட்டத்தில் கழிப்பறைகள் கட்டப்பட்டன.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 403 கழிப்பறைகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கபட்டது. ஆனால் 373 கழிப்பறை மட்டுமே கட்டப்பட்டுள்ளது.மீதி உள்ள 30 கழிப்பறைகள் கட்டாமலேயே, பணத்தை போலி ஆவணம் தயார் செய்து கையாண்டு உள்ளனர். இது குறித்து எழுந்த புகாரின் பேரில் லஞ்சம் ஒழிப்பு துறை துணை போலீஸ் இராமச்சந்திரன் மற்றும் போலீஸ் நடத்திய விசாரணையில் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணியாற்றிய செல்வராஜ், ரமேஷ், அமுதபவம், சந்திரா, நசிரா பேகம், அன்பு துரை, தாயுமாணவர் மற்றும் இளங்கோ உள்ளிட்ட  9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதில் ஏனையோர் பணி ஒய்வு பெற்றுவிட்ட நிலையில் சிவகங்கை பயிற்சி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய ரமேஷ் ஜூன் 1-ம் தேதி பணி ஒய்வு பெற இருந்தார். இந்நிலையில் அவரை பணியிடம் நிக்கம் செய்து கலெக்டர் மதுசூதனன் ரெட்டி உத்தரவிட்டார்.   


Tags : AIADMK regime abuses toilet program: Case against 9 including 8 PDOs- One suspended
× RELATED கோவை வாக்காளர் பெயர் நீக்க விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு