காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதிய திருத்தேர் செய்யும் பணியினை தொடங்கி வைத்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய திருத்தேர் செய்யும் பணியினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்துள்ளார்.

    

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில், அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்களில் ஆகிய திருக்கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.     

அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில், 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இத்திருக்கோயிலை பழமை மாறாமல் புனரமைக்கவும், இராஜ கோபுரத்தை வண்ணம் பூசவும், தாயார் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி புனரமைக்கவும், பக்தர்களின் அடிப்படை வசதிகளை செய்து தரவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயார் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடுகள் முடிந்தவுடன் பழமை மாறாமல் திருப்பணிகள் விரைவில் தொடங்கப்படும். இத்திருக்கோயிலில் புதிய திருத்தேர் செய்யும் பணியினை ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் வான்மதி, மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம்) விஜயா, மற்றும் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

Related Stories: