×

வைகாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்

வத்திராயிருப்பு: வைகாசி அமாவாசையையொட்டி ராமேஸ்வரம், சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்.மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. இங்கு வைகாசி அமாவாசை வழிபாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நேற்று அதிகாலை ஒரு மணியிலிருந்து ஏராளமான வாகனங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். அதிகாலை 5.45 மணி அளவில் வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் உடமைகளை வனவர் சின்னக்கருப்பன் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் சோதனை செய்தனர்.

அமாவாசையையொட்டி கோயிலில் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்க சுவாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர். தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் இல்லாததால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பக்தர்கள் கடும் சிரமப்பட்டனர்.இதேபோல் ராமேஸ்வரத்திலும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். தொடர்ந்து அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடினர். பின்னர் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசித்தனர்.

Tags : Rameswaram ,Chaduragiri ,Vaikasi New Moon , Devotees gathered at Rameswaram and Sathuragiri on the eve of the Vaikasi New Moon
× RELATED மின் தடையை சீரமைக்க கோரிக்கை