×

பாலகிருஷ்ணா ஜோடியாகும் தமன்னா

ஐதராபாத்: பாலகிருஷ்ணா ஜோடியாக தமன்னா நடிக்கும் பட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.அகண்டா படத்துக்கு பிறகு பொயப்படி னு இயக்கும் படத்தில் மீண்டும் பாலகிருஷ்ணா நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார். இப்படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இதில் நடித்தபடியே அனில் ரவிப்புடி இயக்கும் படத்திலும் பாலகிருஷ்ணா நடிக்கிறார். இதில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார்.

 படத்தில் பாலகிருஷ்ணாவின் மகளாக தெலுங்கு நடிகை லீலா ஒப்பந்தமாகியுள்ளார். இவர் பிரபாசுடன் ராஜா டீலக்ஸ், ரவிதேஜாவுடன் தமாகா ஆகிய படங்களில் நடித்து பிரபலம் ஆனவர். தந்தை, மகள் பாசம், இதற்கு நடுவே வரும் வில்லன் கூட்டம் என்ற வகையில் ஆக்‌ஷன் படமாக அனில் ரவிபுடி இயக்க உள்ள படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.Tags : Tamanna , couple
× RELATED சாக்லெட் பேக்டரியில் தமன்னா