×

உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் வியட்நாமில் திறப்பு: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற பாலத்தில் நடக்க மக்கள் ஆர்வம்

ஹனோய்: உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் வியட்நாமில் திறக்‍கப்பட்டது. வியட்நாமில் உள்ள சன் லா என்ற பகுதியில் இரண்டு மலைகளுக்‍கு இடையே 492 அடி உயரத்தில் அமைந்த இந்த கண்ணாடிப் பாலமானது 632 மீட்டர் பாக் லாங் எனப்படும் இந்த வெள்ளை டிராகன் பாலமானது 632 ​​மீட்டர் நீளமுள்ள தொங்கு பாலமாகும். இந்த பாலத்தில் உள்ள கண்ணாடிகள் 40 மில்லி மீட்டர் தடிமத்தில் உடையாத விதத்தில் வடிவமைக்‍கப்பட்டுள்ளது. இதில் ஒரே நாளில் 450 பேர் நடக்‍கலாம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அப்போது பாலத்தில் பாரம்பரிய டிராகன் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வியட்நாமில் திறக்‍கப்பட்டுள்ள இந்த பாலம், உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் என்ற கின்னஸ் சாத​னையையும் பெற்றுள்ளது. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த கண்ணாடி பாலத்தில் நடக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் இருக்‍கும் 526 மீட்டர் கண்ணாடி பாலம் தான் இதற்கு முன்பு அதிக நீளமுள்ள கண்ணாடி பாலமாக இருந்தது.

Tags : Vietnam , Glass Bridge, Vietnam, Guinness, People, Curiosity
× RELATED கோவையில் 9வது சர்வதேச பலூன் திருவிழா கோலாகலமாக தொடக்கம்