×

முதன்முறையாக இந்தியாவின் பெண் எழுத்தாளருக்கு சர்வதேச புக்கர் விருது அறிவிப்பு: நாட்டின் பிரிவினை குறித்த புத்தகம்

லண்டன்: இந்தியாவின் பெண் எழுத்தாளர் கீதாஞ்சலிக்கு சர்வதேச புக்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பெண் எழுத்தாளர்களில் முதன்முறையாக, இவ்விருதை பெறுகிறார்.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்பில் வெளியான நூல்கள், நாவல்கள் மற்றும் புதினங்களில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இங்கிலாந்தில் வெளியிடப்படும் நாவல்களில் ஆண்டுதோறும் சிறந்த நாவல் தேர்வு செய்யப்பட்டு அதற்கு பரிசு அளிக்கப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் வழக்கப்படி, இந்த ஆண்டுக்கான சிறந்த நாவலை தேர்வு செய்ய தலைநகர் லண்டனில் ஐந்து நீதிபதிகளை கொண்ட தேர்வு குழுவினர் பல நாவல்களை படித்து, தேர்வு செய்துள்ளனர். இதுகுறித்து ‘தி புக்கர் பிரைஸ்’ சார்பில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘டெல்லியைச் சேர்ந்த இந்தி மொழி எழுத்தாளர் கீதாஞ்சலி-க்கு, சர்வதேச புக்கர்  பரிசு அறிவிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச புக்கர் விருது வென்ற முதல் பெண் எழுத்தாளர் என்ற பெருமையை கீதாஞ்சலி பெற்றுள்ளார்.  தேசி ராக்வெல் என்பவரால் டோம்ப் ஆஃப் சாண்ட் என ஆங்கிலத்தில் மொழி  பெயர்க்கப்பட்ட இவரது நாவலான ரெட் சமாதி புத்தகமானது, புக்கர் பரிசை வென்றுள்ளது. இந்த  விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தி மொழி புத்தகம் ஆகும். இந்த புத்தகம் நாட்டின் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. பிரிவினையின் போது வயதான பெண்ணின் கணவர் இறந்ததை அடிப்படையாகக் கொண்டது. எழுத்தாளர் கீதாஞ்சலி , பல சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : For the first time, India has announced the International Booker Prize for Female Writers
× RELATED அயோவாவில் பறவைக் காய்ச்சல்: 42 லட்சம் கோழிகள் அழிப்பு