- சிரோமணி கூட்டணி
- பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்
- பஜன் சமாஜ்
- சண்டிகார்
- பஞ்சாப்
- நீலாலா
- சிரோமணி
- பஞ்சாப் சட்டம்
சண்டிகர்: பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதை சந்திப்பதற்கான கூட்டணி அமைப்பதில் கட்சிகள் தீவிரமாக உள்ளன. இந்நிலையி்ல, சிரோமணி அகாலிதளத்துடன் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் நேற்று கூட்டணி அமைத்தது. இதற்கான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இம்மாநிலத்தில் கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலை பாஜ.வுடன் இணைந்து சிரோமணி அகாலிதளம் சந்தித்தது. மேலும், மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றது. ஆனால், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ கூட்டணியில் இருந்து கடந்தாண்டு வெளியேறியது. புதிய கூட்டணி பற்றி இக்கட்சியின் தலைவரான சுக்பிர் சிங் பாதல் கூறுகையில், ‘‘பஞ்சாப் மாநில அரசியலில் இது வரலாற்று சிறப்புமிக்க நாள். 2022ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை பகுஜன் சமாஜுடன் இணைந்து சந்திக்கிறோம். இது பெரும் திருப்புமுனையாக அமையும். அடுத்தடுத்த தேர்தல்களிலும் எங்கள் கூட்டணி தொடரும். மொத்தமுள்ள 117 தொகுதிகளில் பகுஜன் சமாஜுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன,’’ என்றார்….
The post பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் பகுஜன் சமாஜுடன் சிரோமணி கூட்டணி: 20 தொகுதிகள் ஒதுக்கீடு appeared first on Dinakaran.