×

சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மீசை மாதையன் உடல்நலக் குறைவால் காலமானார் : 35 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்!!

சேலம்: சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த சந்தன கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தமிழகம், கர்நாடகா, கேரளா மாநில போலீசாருக்கு 25 ஆண்டுகாலமாக கண்ணாமூச்சி காட்டி வந்தவர் சந்தன மரக்கடத்தல் வீரப்பன். 2004-ம் ஆண்டு தமிழக அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் வீரப்பன். சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் (75). இவர் கடந்த 1987ல் சத்தியமங்கலத்தில் ரேஞ்சர் சிதம்பரம் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர், கடந்த 35 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். இவரை விடுதலை செய்ய வேண்டும் என சில அரசியல் கட்சியினர் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மாதையன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பரோலில் சென்று திரும்பினார். மீண்டும் மாதையனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவரின் உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதை தெரிவித்தனர்.  இது தொடர்பாக போலீசார், மாதையனின் மனைவி மாரியம்மாள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் மாதையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மாதையனின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பது தொடர்பான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Chess, Master, Final, Pragyananda
× RELATED மதரீதியாக வாக்கு சேகரித்த புகாரில்...