×

யூடியூபில் தவறான செய்திகள் வருவதை தடுக்க நடவடிக்கை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற நடராஜர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் நடராஜப் பெருமானையும், தில்லை காளியம்மனையும் பற்றி தவறான செய்தியை யூடியூப் சேனலில் பரப்பி வருவது ஏற்புடையதல்ல. இது சம்பந்தமாக சிவனடியார்கள் விடுத்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு நிறைவேற்ற வேண்டும்.

இறை வழிபாடு மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் எவர் செயல்பட்டாலும் அவரை சட்டத்திற்கு உட்பட்டு கடுமையாக தண்டிக்க வேண்டும். மேலும் இது போன்று யூடியூப் தளத்தில் எந்த மதம் சம்பந்தமாகவும் அவதூறான செய்திகள், பிரசாரங்கள் வெளிவராமல், பரவாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். மீறுவோர் மீது கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்.

Tags : YouTube ,GK Vasan , On YouTube, False, News, GK Vasan
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!