படத்தில் அரசியல் வசனங்கள் இயக்குனரிடம் அஜித் மறுப்பு

சென்னை: படத்தில் அரசியல் வசனங்கள், காட்சிகள் இடம்பெறுவதற்கு அஜித் மறுப்பு தெரிவித்துள்ளார்.வினோத் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு, விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறார். இந்த படத்தில் ரெஸ்டாரென்ட் நடத்தும் உரிமையாளராக அஜித் நடிக்கிறாராம். உணவு பொருட்களில் கலப்படம் செய்யும் மாபியா கும்பலை பற்றிய கதையாக இந்த படம் உருவாகிறதாம். இதில் அஜித்துக்காக காரசாரமான அரசியல் காட்சிகள், வசனங்களை விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார்.

சமீபத்தில் அஜித்தை சந்தித்த அவர் இந்த காட்சிகளை பற்றி அவரிடம் விளக்கியுள்ளார். தனது படத்தில் எந்த நிலையிலும் அரசியல் தொடர்பான வசனம், காட்சிகள் இடம்பெறக் கூடாது என்பதில் தீர்மானமாக இருப்பவர் அஜித். இதனால் கோபம் அடைந்த அஜித், படத்திலிருந்து அரசியல் தொடர்பான விஷயங்களை நீக்கும்படி விக்னேஷ் சிவனுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கதையில் மாற்றங்கள் செய்யும் பணி நடக்கிறதாம்.

Related Stories: