சத்தி அருகே அரசு பேருந்து சென்டர் மீடியனில் மோதி விபத்து : அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்

சத்தியமங்கலம்: கும்பகோணத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து நேற்று இரவு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. சத்தியமங்கலம்- கோபிசெட்டிப்பாளையம் சாலையில் அரியப்பம்பாளையம் அருகே சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியன் மீது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர்.

நடத்துநருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. அவர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் தடுப்பு சுவர் மீது முட்டை பாரம் ஏற்றி சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது. எனவே அப்பகுதியில் ஒளிரும் ஸ்டிக்கர் மற்றும் தெருவிளக்கு அமைத்து விபத்து ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: