காவடி பழனியாண்டவர் கோயிலில் தங்கத்தேர் இழுத்த எடப்பாடி பழனிசாமி

சேலம்: சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேக விழா நடந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, காவடி பழனியாண்டவர் கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது, அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து மூலவர் முருக பெருமானை வழிபட்டார். பின்னர் அவர், கோயில் வளாகத்தில் உள்ள தங்கதேரை இழுத்து வழிபட்டார். எடப்பாடி பழனிசாமிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் செங்கோல் வழங்கப்பட்டது.

Related Stories: