×

பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கராத்தே ஆசிரியருக்கு 2 நாள் போலீஸ் காவல்: சிபிசிஐடி நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாணவிகளை பலாத்காரம் செய்த வழக்கில் பத்மா சேஷாத்திரி பள்ளிஆசிரியர் கெபிராஜை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடைபெறுவதாக மாணவிகள் சமூக வலைதளத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து கே.கே.நகர் பத்மா சேஷாத்திரி பள்ளிவணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் பல மாணவிகளை சீரழித்த விவகாரம் தெரிய வந்தது. இதனைதொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றசிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரம் அடங்குவதற்குள், விருகம்பாக்கம் பத்மா சேஷாத்திரி பள்ளியை சேர்ந்த  கராத் தே ஆசிரியர். கெபிராஜ் மீது மாணவி ஒரு பாலியல் புகார் அளித்தார். அதில் அவர் தன்னை காரில் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்தாக கூறியிருத்தார். இதனைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தனி அதிகாரி நியமித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், கெபிராஜ் மேலும் எத்தனை பெண்களை,  சீரழித்தார், அவருக்கு நிர்வாகத்தில் அவருக்கு துணையாக இருந்தவர்கள் யார், என பல்வேறு விசாரணைகளுக்காக போலீசார், காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கெபிராஜை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்….

The post பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கராத்தே ஆசிரியருக்கு 2 நாள் போலீஸ் காவல்: சிபிசிஐடி நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Padma Seshatri ,Karate ,CPCIT ,Chennai ,Kebraj ,CPCID ,Dinakaran ,
× RELATED 12 வயது மாணவி பலாத்காரம்; கராத்தே...