×

தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் பயன்படுகின்றன: பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு

சென்னை: தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் பயன்படுகின்றன என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். சென்னை பல்கலைக்கழக 164வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி, உயரதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில், அமைச்சர் பொன்முடி உரையாடினார். அப்போது பேசிய அவர், நீட் உள்ளிட்ட எந்த தேர்வாக இருந்தாலும், தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்குதான் அவை வழி வகுக்கும்.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்பு, டிகிரி உள்ளிட்ட பட்டபடிப்புகளில் மாணவர்கள்  சேர்க்கை அமைய அரசு உறுதியாக உள்ளது. நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு பலன் அளிக்காது என்று கூறினார். மாணவர்கள் தங்களுக்கான எதிர்காலத்தில் சமூக நீதிக் கொள்கையுடன் செயல்பட வேண்டும். கல்வி மாநில உரிமையில் இருக்க வேண்டும் என்பதையே ஆளுநரிடம் கோரிக்கையாக விடுகிறோம்.

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தமைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நன்றி என்று அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டார். ராஜகோபாலச்சாரி, சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன், சஞ்சீவ ரெட்டி, வி.வி.கிரி, அப்துல்கலாம் உள்ளிட்ட 5 குடியரசுத் தலைவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் என அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.


Tags : Neet ,Minister ,Ponmudi , Private Coaching Center, Robbery, You, Minister Ponmudi
× RELATED நீட் தேர்வில் முறைகேடு : நாடு முழுவதும் 50 பேர் கைது