பிரபாஸ் ஜோடி ஆனார் ராஷ்மிகா

சென்னை: கன்னடத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழிலும் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். அவர் நடித்த புஷ்பா படத்துக்கு பிறகு அவரது மார்க்கெட் கணிசமாக உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் அவர் பிரபாஸ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். பிரபாஸ் நடிப்பில் கடைசியாக ராதே ஷ்யாம் படம் வெளிவந்தது. தற்போது சலார், ஆதி புருஷ் படங்களில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அவர் நடிக்கும் படத்தை அர்ஜூன் ரெட்டி தெலுங்கு படத்தை இயக்கிய சந்தீப் வங்கா இயக்குகிறார். இதற்கு ஸ்பிரிட் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்புகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: