×

தொழிலதிபர் வீட்டில் 100 சவரன் கொள்ளை

சென்னை: குன்றத்தூர், மணிகண்டன் நகர், மெட்ரோ ஸ்டார் சிட்டி 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆசாத் (42), அனகாபுத்தூரில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர், கடந்த 2012ம் ஆண்டு முதல் இப்பகுதியில் வீடு கட்டி, குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  இவரது மனைவி பெயர்  மனசா, இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.இவர், பெங்களூருவில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு கடந்த 8ம் தேதி தனது குடும்பத்துடன் சென்றார். அங்கிருந்து நேற்று முன்தினம் காலை வீடு திரும்பினார். அப்போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.  உடனே உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 100 சவரன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

பீரோவில் உள்ள மற்றொரு லாக்கரை உடைக்க முடியாததால், அதில் இருந்த பணம் தப்பியது தெரிந்தது. இதுகுறித்து குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அம்பத்தூர் அடுத்த ஒரகடம் வளர்மதி நகர் பகுதியை சேர்ந்தவர் தீபிகா(32), தனியார் நிறுவன ஊழியர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து கடந்த 5 வருடங்களாக பெரம்பூரில் உள்ள தனது தந்தை வீட்டில் மகள் பிரதீபாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், மகள் பிரதீபாவிற்கு பள்ளி விடுமுறை என்பதால் அதேபகுதியில் உள்ள தனது தந்தையின் வேறொரு வீட்டிற்கு மகளை தனது தாயாருடன் அனுப்பி வைத்தார். பின்னர் தீபிகா வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு அலுவகத்திற்கு சென்றார். மறுநாள் காலை  பணி முடிந்து வீட்டிற்கு வந்தார்.  அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 27 சவரன் மற்றும் ₹40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளைபோனது தெரியவந்தது. புகாரின்பேரில் அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.= வில்லிவாக்கம் வடக்கு திருமலை நகரை சேர்ந்தவர் பிரியபிரசாத். தனியார் பள்ளி ஆசிரியை. கடந்த மாதம் 23ம் தேதி இவரது வீட்டில் இருந்த   50 சவரன் மற்றும் ₹20 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். புகாரின்பேரில், ஐசிஎப் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் மாலை செங்குன்றம் பகுதியை சேர்ந்த கோகிலா(30) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது நண்பர் சரவணன்(34) என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Businessman home 100 shaving robbery
× RELATED அனுமதியின்றி இ-சேவை மையம்: போலி ஆவணங்கள் தயாரித்தவர் கைது