×

கூடலூரில் வாசனை திரவியக் கண்காட்சி தொடக்கம்: ஏலக்காய், கிராம்பு உள்ளிட்டவை கொண்டு சிற்பங்கள் வடிவமைப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் கோடைவிழாவை ஒட்டி 9-வது வாசனை திரவிய கண்காட்சி தொடங்கியுள்ளது. கூடலூரில் இன்று காலை 9-வது வாசனை திரவிய கண்காட்சி தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் துவக்கி வைத்தார். கடந்த 2 வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக இந்த கண்காட்சிகள் நடைபெறாத நிலையில், இந்த வருடம் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. குறிப்பாக தோட்டக்கலை சார்பில், 75 கிலோ வாசனை திரவியங்களால் ஆன ஏர் உழவன் காளைமாடு சிற்பம் பிரதானமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் இங்கு வருகை தந்த அனைவரையும் கவர்ந்தது.

மேலும், பழங்குடியின பெண் ஒருவர் தேயிலை பறிக்கும் சிற்பமும் வாசனை திரவியங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோல அனைத்து வாசனை திரவியங்கள் அடங்கிய சிற்பமும் இங்கு வைக்கப்பட்டுள்ளது. வனத்துறை சார்பிலும், தோட்டக்கலை சார்பிலும் பல்வேறு அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இதனை காண ஏராளமான ஊர்மக்களும், சுற்றுலா பயணிகளும் அரங்குகளில் நிறைந்து காணப்படுகின்றனர். இதைத்தவிர, பிற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் மிகவும் சிறந்த முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இக்கண்காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகின்றன. விளையாட்டு அரங்கு அமைக்கும் நேரத்தில் மழை இருந்ததன் காரணமாக பெரும்பாலான அரங்குகள் நிறைவு பெறாமல் உள்ளது. இதற்கான பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்பொழுது கண்காட்சி அரங்குகள் திறக்கப்பட்டதால், பொதுமக்கள் அதனை கண்டு ரசித்து வருகின்றனர்.    


Tags : Cuddalore , Cuddalore, Perfume, Exhibition, Cardamom, Sculpture
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!