×

காமெடிக்கு மாறிய தமன்னா

ஐதராபாத்: மராத்தி, தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஹீரோயினாக நடித்தவர், தமன்னா. தற்போது தமிழில் அவருக்கு புதுப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், தெலுங்கில் ‘குர்துண்டா சீதாகாலம்’, ‘எஃப் 3’, ‘போலா சங்கர்’, இந்தியில் ‘பிளான் ஏ பிளான் பி’, ‘போலே சூடியன்’, ‘பப்ளி பவுன்சர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். வெங்கடேஷ் ஜோடியாக அவர் நடித்துள்ள ‘எஃப் 3’ என்ற படம் வரும் 27ம் தேதி திரைக்கு வருகிறது. இதுகுறித்து தமன்னா கூறுகையில், ‘படத்தில் என் கேரக்டர் திருப்புமுனையாக இருக்கும். நான் எதிர்பார்த்ததை விட அந்த கேரக்டர் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. வெங்கடேஷ் ரசிகர்கள் மத்தியில் எனது கேரக்டருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இதுவரை நான் நடித்த எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு காமெடி நடிப்பை வழங்கியிருக்கிறேன். இப்படி நடிப்பது எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது’ என்றார்.

Tags : Tamanna , Tamanna turned to comedy
× RELATED சாக்லெட் பேக்டரியில் தமன்னா