×

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறப்பு!: தஞ்சையில் பட்டாசு வெடித்து விவசாயிகள் மகிழ்ச்சி..!!

தஞ்சை: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்துவிட்டுள்ளார். இதனால் காவிரி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சற்று நேரத்திற்கு முன்பு தண்ணீர் திறந்து வைத்தார். இதற்கு தஞ்சை மாவட்டத்தில் இருக்கக்கூடிய விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். 
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்திருக்கிறார். கல்லணை, வெள்ளாறு உள்ளிட்ட பகுதிகளில் ஆறுகள் எந்த அளவிற்கு தூர்வாரப்பட்டிருக்கிறது. அணைகள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பது குறித்து நேற்று மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 
தொடர்ச்சியாக, தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட மாவட்டங்களில் கிட்டத்தட்ட 65.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லும் வகையில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிட்டார். இதற்கு தஞ்சை மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். 

The post குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறப்பு!: தஞ்சையில் பட்டாசு வெடித்து விவசாயிகள் மகிழ்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : MATTURE ,Dam ,Thanjam ,Anjai ,Mattur Dam ,G.K. Stalin ,Caviri ,Thanjai ,
× RELATED மூணாறு அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு