×

இலங்கையில் வன்முறை: கொழும்பில் உள்ள ராஜபக்சே கட்சி அலுவலகத்துக்கு கிளர்ச்சியாளர்கள் தீ வைத்து எரிப்பு

இலங்கை : கொழும்பில் உள்ள ராஜபக்சே கட்சி அலுவலகத்துக்கு கிளர்ச்சியாளர்கள் தீ வைத்து எரித்தனர் . சொந்த ஊரில் இருந்து குண்டர்களை அழைத்து வந்து தாக்குதல் நடத்தியதாக ராஜபக்சே மீது போராட்டக்காரர்கள் குற்றசாட்டு வைத்தனர். ராஜபக்சே ஆதரவு குண்டர்களை மரத்தில் கட்டிவைத்து போராட்டக்காரர்கள் அடித்து உதைத்தனர். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த ரூ. 2000 அளிப்பதாக கூறி அழைத்து வந்ததாக பிடிபட்ட குண்டர்கள் வாக்குமூலம் அளித்துயுள்ளனர். இந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் 23- பேர் காயம் அடைந்துள்ளனர். இலங்கையில்  ஏற்பட்டுள்ள  கலவரத்தில்  ஆளும்கட்சியின் எம்.பி  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் கலவரம் வெடித்தது. இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இலங்கை அரசுக்கு எதிராக ஒரு மாதத்துக்கு மேல் நடந்து வரும் போராட்டத்துக்கு பணிந்து பதவி விலகினார். பதவி விலகல் கடிதத்தை இலங்கை அதிபரும் தனது இளைய சகோதரருமான கோத்தபயவிடம் மகிந்த ராஜபக்சே வழங்கியுள்ளார். கலவரம் பரவி வரும் அதே வேலையில் காலேமுகத்திடலில் ராஜபக்சே பதவி விலகலை வரவேற்று கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. கொழும்புவில் ராஜபக்சே ஆதரவாளர்களை ஏற்றிவந்த பேருந்து மீது ஜேசிபி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும்  ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  கொழும்பு நிட்டம்புவை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் இலங்கையில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.


Tags : Sri Lanka ,Rajapakse ,Colombo , Sri Lanka, Violence, Rajapaksa, Party Office, Fire
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...