×

வரத்து குறைவு எதிரொலி கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ், கேரட் விலை உயர்வு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருகிறது. இன்று காலை 530 வாகனங்களில் 5,000 டன் காய்கறிகள் வந்துள்ளன. கேரட், பீன்ஸ், பீட்ரூட் ஆகிய காய்கறிகள் குறைவாக வந்துள்ளதால் அதன் விலைகள் உயர்ந்துள்ளன. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் முத்துக்குமார் கூறுகையில், ‘‘கோயம்பேடு மாரக்கெட்டில் பீன்ஸ், கேரட் மற்றும் பீட்ரூட் விலைகள் உயர்ந்துள்ளன.

 இதற்கு காரணம் அந்த காய்கறிகளின் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. நேற்று ஒரு கிலோ பீன்ஸ் 40 ரூபாய்க்கு விற்றது இன்று காலை 80க்கு விற்பனையானது. கேரட் 35ல் இருந்து 45க்கும் பீட்ரூட் 20 ல் இருந்து 35க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உருளைகிழங்கு 20ல் 25க்கும் விற்பனை செய்யப்படுகிறது’ என்றார். 


Tags : Coimbade Market , Coimbatore, market beans, carrots, hike
× RELATED டாக்டரின் மருந்து சீட் இல்லாமல்...