×

தென்னிந்திய அளவிலான கபடி போட்டி: பெண்கள் பிரிவில் தமிழக அணி முதலிடம்

நெல்லை : தென்னிந்திய அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் கர்நாடகா அணியும், பெண்கள் பிரிவில் தமிழக அணியும் முதலிடம் பிடித்தன.நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே செட்டிகுளத்தில் மூன்று நாட்கள்  தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து 16 அணிகள் கலந்து கொண்டன. இந்தப் போட்டிகளில் ஆண்கள் பிரிவு இறுதி போட்டியில் ஹைதராபாத் ஆர்மி அணியும் கர்நாடகா பேங்க் ஆப் பரோடா அணியும் மோதின. இதில் பாங்க் ஆப் பரோடா அணி 24:11 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற பேங்க் ஆப் பரோடா அணிக்கு முதல் பரிசாக கோப்பையுடன் 1 லட்சம் ரூபாயும், இரண்டாமிடம் பிடித்த ஹைட்ராபாத் அணிக்கு கோப்பையுடன் 50 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது. சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டன.

மேலும் பெண்கள் பிரிவில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களிலிருந்து 13 அணிகள் கலந்து கொண்டன.பெண்கள் பிரிவு இறுதி போட்டியில் பெங்களூரு அணியும், தமிழகத்தை சேர்ந்த ஒட்டன்சத்திரம் அணியும் மோதியது. இதில் ஒட்டன்சத்திரம் அணி 41:35 என்ற புள்ளி கணக்கில் பெங்களூர் அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த ஓட்டன்சத்திரம் அணிக்கு கோப்பையுடன் 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாமிடம் பிடித்த கர்நாடகா அணிக்கு ரூபாய் 25 ஆயிரமும் கோப்பையும் வழங்கப்பட்டது. சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.


Tags : Kabaddi ,Tamil ,Nadu , South India, Kabaddi, Competition, Women
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...