வேகமெடுக்கும் கொரோனா பரவல்!: ஒடிசாவில் 64 பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு உறுதி..சக மாணவர்கள் அச்சம்..!!

ராயக்கடா: ஒடிசா மாநிலத்தில் ஒரேநாளில் 64 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயக்கடா மாவட்டத்தில் கோட்லகுடா என்ற  பகுதியில் இயங்கி வந்த 2 பள்ளி மாணவர் தங்கும் விடுதியில் இருக்கும் 257 மாணாக்கர்களுக்கு சுகாதாரத்துறையினர் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 64 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் யாருக்கும் பாதிப்புக்கான அறிகுறிகள் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உடனடியாக 64 மாணவர்களையும் தனிமைப்படுத்திய ஒடிசா சுகாதார பணியாளர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசோதனை மாதிரிகள் மறுசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், தொற்று கண்டறியப்பட்டிருக்கும் மாணவர் விடுதிகளை மருத்துவ நிபுணர்கள் ஆய்விட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் ராயக்கடா மாவட்ட ஆட்சியர் சரேஷ்குமார் மிஸ்ரா தெரிவித்திருக்கிறார்.

Related Stories: