×

விமானம் ஓட்டும் வினய்

சென்னை: தமிழில் வெளியான ‘உன்னாலே உன்னாலே’, ‘ஒன்பதுல குரு’, ’துப்பறிவாளன்’, ‘டாக்டர்’, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘ஓ மை டாக்’ உள்பட பல படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்தவர், வினய். சமீபத்தில் அவரும், நடிகை விமலா ராமனும் காதலிப்பதாக தகவல் வெளியானது. இதை இருவரும் மறுத்துள்ள நிலையில், தற்போது வினய் விமானம் ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து விமலா ராமன், ‘உங்கள் கனவு நனவானது’ என்று தெரிவித்துள்ளார். வினய் கூறுகையில், ‘தற்போது சிட்னியில் 2,500 அடி உயரத்தில் சிறிய ரக விமானத்தை, அதன் பயிற்சியாளர் கொடுத்த வழிகாட்டுதலை பின்பற்றி இயக்கினேன். விமானத்தை தரையிறக்குவது எப்படி என்றும் கற்றுள்ளேன்’ என்றார். நடிகர்களில் அஜித் குமார், முன்னாள் ஹீரோயின் மாதவி போன்றோர் விமானம் ஓட்ட லைசென்ஸ் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Vinay , Vinay driving a plane
× RELATED தொழிலதிபர் கொலை வழக்கு: என்கவுன்டரில் நேற்றிரவு குற்றவாளி சுட்டுக் கொலை