×

தீமிதி திருவிழாவில் 2 பேருக்கு தீக்காயம்

திருத்தணி: திருத்தணி பழைய திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா கடந்த 21ம்  தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிறைவு நாளான நேற்று பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கினர். அப்போது, திருத்தணி நரசிம்ம சுவாமி கோயில் தெருவை சேர்ந்த ஏழுமலை(49), காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியை சேர்ந்த தர்மலிங்கம்(60) ஆகியோர் எதிர்பாராதவிதமாக தீ குண்டத்தில் கால் தவறி விழுந்தனர். இதனால் அவர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது. போலீசார் அவர்களை மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Tags : Timothy Festival , Burns to 2 people at Timothy Festival
× RELATED நாகாத்தம்மன் கோயிலில் 17ம் ஆண்டு தீமிதி திருவிழா