×

கள்ளக்காதலனை காப்பாற்ற பொய் சாட்சி கூறிய பெண்: போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னையில், மகளிடம் தவறாக நடந்து கொண்ட கள்ளக்காதலனை காப்பாற்ற  நீதிமன்றத்தில் பொய்சாட்சி கூறிய பெண், போக்சோவில் கைது செய்யப்பட்டார். டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த அபிராமி என்பவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ள நிலையில், ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இதனிடையே, அபிராமியின் 13 வயது மகளிடம் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசார், ஜார்ஜ் பெர்ணான்டஸை கைது செய்தனர். இது தொடர்பான விசாரணையின் போது, ஜார்ஜ் பெர்னாண்டஸ் நாள்தோறும் குடித்து விட்டு துன்புறுத்தியதால், அவர் மீது பொய் புகார் அளித்ததாக, அபிராமி தெரிவித்தார். இது பற்றி கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசார் விசாரித்தில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காப்பாற்ற அபிராமி முயன்றது தெரியவந்தது. இதன்படி, அபிராமியை போக்சோ வழக்கில் கைது செய்ய போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags : False love, false witness, woman, pox, arrest
× RELATED நாட்டு வெடிகுண்டுகளுடன் 2 ரவுடிகள் கைது