×

கடையத்தில் மரநாய் பிடிபட்டது

கடையம்: கடையம் துணை மின்நிலைய அலுவலகத்தில் புகுந்த மரநாயை வனத்துறையினர் பிடித்தனர். கடையம் அருகே கட்டேறிப்பட்டியில் துணை மின்நிலையம் இயங்கி வருகிறது. இங்குள்ள பழுதடைந்த அலுவலகக் கட்டிடத்தில் மரநாய் ஒன்று பதுங்கி இருந்தது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கடையம் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து களக்காடு புலிகள் காப்பகம் துணை இயக்குநர் (பொ) கவுதம் உத்தரவின் பேரிலும், கடையம் வனச்சரகர் (பொ) பரத் அறிவுறுத்தலின் பேரிலும் கடையம் வனவர் முருகசாமி தலைமையில் வனக்காப்பாளர் மணி மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் விரைந்து சென்று மின்வாரிய அலுவலகத்தில் பதுங்கியிருந்த ஆண் மரநாயைப் பிடித்து ராமநதி வனப்பகுதியில் கொண்டு விட்டனர்….

The post கடையத்தில் மரநாய் பிடிபட்டது appeared first on Dinakaran.

Tags : Khadayam ,Katteripatti ,Dinakaran ,
× RELATED கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட வாலிபரை சரமாரியாக வெட்டிய இருவர் கைது